மீண்டும் அணிக்காக தன்னுடைய பேட்டிங் பொசிஷனை தியாகம் செய்யும் கே எல் ராகுல்!
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியேக் காணாமல் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையைக் கைபற்றி அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி இக்கட்டான போட்டிகளில் நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் கே எல் ராகுல்.
இறுதிப் போட்டியில் கூட அவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ராகுல் தற்போது தோனிக்கு அடுத்து இந்திய அணிக்கு சிறந்த பினிஷராக உருவாகியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக தன்னுடையக் கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினார். ஆனால் சூழ்நிலைக் காரணமாக தற்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் மட்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த அவர் தற்போது அதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களமிறங்க்கவுள்ளாராம். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் அவர் தற்போது அணிக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.