வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (20:37 IST)

ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு.!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியது.   
 
இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், மூன்றாவது முறை போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது.

 
இந்நிலையில் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.