வியாழன், 31 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 30 அக்டோபர் 2024 (07:52 IST)

‘எதிர்மறை விமர்சனங்கள் இருக்கதான் செய்யும்’… சோஷியல் மீடியா கருத்துகள் குறித்து இஷான் கிஷான்

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று சொல்லி அந்த தொடரில் இருந்து விடுப்பு கேட்டு வெளியேறினார்.  ஆனால் உண்மையில் அவர் தொடர்ந்து பென்ச்சில் உட்காரவைக்கப்படுவதால்தான் அதிருப்தியில் வெளியேறினார் என சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் நடந்த ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை. ஆனால் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாடவேண்டும் என்ற விதியை அறிவுறுத்தியும் கூட அவர் விளையாடவில்லை. இதனால் அவருக்கான ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இளம் வீரரான இஷான் கிஷான் பிசிசிஐயுடன் மோதல் போக்கில் செயல்பட்டால் அவர் எதிர்காலத்துக்குதான் பாதிப்பு என்று பலரும் அவருக்கு அறிவுரைக் கூறிவந்தனர். தற்போது அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் சோஷியல் மீடியாக்களில் வரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் “சமூகவலைதளங்களில் எப்போதும் எதிரமறைக் கருத்துகள் வரதான் செய்யும்.  நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் உங்களை கிண்டல் செய்வது சாதாரணமானதுதான். ஆனால் அதே ஆட்கள் நாம் சரியாக விளையாடும் போது புகழ்ந்தும் பேசுவார்கள். ஹர்திக் பாண்ட்யாவுக்கு நடந்ததும் இதேதான்” எனக் கூறியுள்ளார்.