1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (17:59 IST)

IPL அமைப்பின் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?

ipl 2024
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
 
இதற்காக, சென்னை கிங்ச், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 
நட்ப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை அணியுடன் பெங்களூரு அணி மோதவுள்ளது.
 
 நாளை இரவு 8 மணிக்கு ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில், இப்போட்டியை காண ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
 
கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த ஐபிஎல் ரசிகர்களின் அமோக வரவேற்பால்  உலகம் முழுவதும் பிரபலமடைந்து அமோசக வளர்ச்சியை பெற்றுள்ளது.
 
இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.89 ஆயிரம் கோடி என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதில், 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் மூலம் உரு.48 390 கோடி வருவாய் ஈட்டுவதாகவும், 10 அணிகளின் மதிப்பும் அடங்கியுள்ளது. இது தொடங்கியதில் இருந்து 433 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.439 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில் அதன் தற்போதைய மதிப்பு ரூ.7300 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.