1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (19:31 IST)

கேப்டன் மாற்றம் தோனியின் முடிவா? CSK பயிற்சியாளர் பேட்டி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
 
இதற்காக, சென்னை கிங்ச், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 
நட்ப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை அணியுடன் பெங்களூரு அணி மோதவுள்ளது.
 
 நாளை இரவு 8 மணிக்கு ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில், இப்போட்டியை காண ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
 
இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ளார். இது  ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தோனிக்குப் பதிலாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 
 
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் என்பது எதிர்காலத்திற்காக அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. இது தோனியின் தனிப்பட்டை முடிவல்ல என்று தெரிவித்துள்ளார்.