திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மே 2024 (16:37 IST)

போட்டி முடிந்த பின்னர் ரசிகர்களைக் காத்திருக்க சொன்ன சி எஸ் கே நிர்வாகம்… தோனியின் கடைசி போட்டியா?

தற்போது சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிதான் சி எஸ் கே அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியாகும். அதனால் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாகக் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போட்டி முடிந்த பின்னர் மைதானத்திலேயே ரசிகர்களைக் காத்திருக்க சொல்லியுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவாகியுள்ளது.

சென்னை அணிக்கு கடைசி லீக் போட்டி என்பதால் நன்றி நவிலும் நிகழ்ச்சி நடக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், தோனியின் ஓய்வு அறிவித்தல் நிகழ்ச்சி நடக்குமோ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக தோனியின் மனைவி ஸீவா மற்றும் அவரது பெற்றோர் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.