திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2023 (09:28 IST)

சென்னையில் இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகள்… தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு குஷி செய்தி!

16 ஆவது ஐபிஎல் சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் போட்டித் தொடர் நடந்த நிலையில், இந்த சீசன் இந்த ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த சீசன்களில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், நான்கு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2 முறை கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளும் தலா ஒரு முறை ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் கோப்பையை வென்றுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிப் போட்டி மற்றும் குவாலிஃபையர் 2 போட்டிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளன. அதே போல 2 ப்ளே ஆஃப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளன. இது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.