ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2024 (17:24 IST)

IPL Mega Auction: சுக்கிரன் உச்சத்தில்..! அதிக விலைக்கு ஏலம் போன ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்! இதுவரையிலான ஏல பட்டியல்!

Rishab Pant and Shreyas Iyer

IPL Mega Auction: ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான மெகா ஏலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

 

 

2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று துபாயில் ஐபிஎல் மெகா ஏலம் பரபரப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல்லின் 10 அணிகளும் பங்கேற்றுள்ள இந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிகமான கையிருப்பு தொகையும், RTMகளும் உள்ளதால் ஆரம்பம் முதலே முக்கிய வீரர்களை தட்டி தூக்கி வருகிறது.

 

அர்ஷ்தீப் சிங் முதலில் ஏலத்திற்கு வந்த நிலையில் 18 கோடிக்கு ஆர்சிபி ஏலத்தில் எடுத்தபோது RTMஐ பயன்படுத்தி அவரை தக்க வைத்தது பஞ்சாப். தொடர்ந்து முந்தைய சீசனில் கொல்கத்தா அணி கேப்டனாக விளையாடி கோப்பையை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் ஏலத்திற்கு வந்த நிலையில் அவரை எடுக்க கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் அணிகள் இடையே கடும் மோதல் எழுந்தது.
 

 

இதில் இதுவரை இல்லாத அளவு ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதை தொடர்ந்து ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வந்தபோது ஆர்சிபி அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே அவரை எடுப்பதில் போட்டி நிலவியது. இதில் ஷ்ரேயாஸ் ஐயரின் ஏல ரெக்கார்டை முறியடித்து ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை கைப்பற்றியது லக்னோ அணி. தொடர்ந்து ஏலத்தில் போன வீரர்கள் பட்டியல்

 
  • ஜாஸ் பட்லர் - குஜராத் டைட்டன்ஸ் - 15.75 கோடி
  • மிட்செல் ஸ்டார்க் - டெல்லி கேப்பிட்டல்ஸ் - 11.75 கோடி
  • முகமது ஷமி - சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 10 கோடி
  • டேவிட் மில்லர் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 7.5 கோடி
  • யுஸ்வேந்திர சஹல் - பஞ்சாப் கிங்ஸ் - 18 கோடி
  • முகமது சிராஜ் - குஜராத் டைட்டன்ஸ் - 12.25 கோடி
  • லியாம் லிவிங்ஸ்டன் - ஆர்சிபி - 8.75 கோடி
 

Edit by Prasanth.K