புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 ஜனவரி 2022 (15:44 IST)

ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பையில் நடக்க வாய்ப்பு!

ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பையில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எப்படியாவது இந்தியாவில் நடத்திவிட வேண்டும் என்பதில் பிசிசிஐ குறியாக உள்ளது. ஆனால் பயோபபுள் சூழலில் இந்தியாவில் நடத்துவது சாத்தியம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதையும் மும்பையில் இருக்கும் மூன்று மைதானங்களில் மட்டும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ள்தாக சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமானால் தென் ஆப்பிரிக்காவில் போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.