ஐபிஎல் 2022-; கொல்கத்தா அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல்-15வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில்,டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்லத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது.
எனவே குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.இதில், காக் 50 ரன்களும், ஹூடா 41ரன்களும், பாண்ட்யா 25 ரன்களும் , ஸ்டொனிஸ் 28 ரன்களும், ஹோல்டர் 13 ரன்களும் அடித்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடிவில், குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து, கொல்கத்தாவுக்கு 177 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.