வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 10 அக்டோபர் 2020 (15:36 IST)

ஐபில்-2020; டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு…

ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துவதுபோல் சுவாரஸ்யமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் அபுதாபியில் மலை 3:30 மணிக்கு கே.எஸ்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியுடன், தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா அணி மோதவுள்ளது.

இந்த இருஅணிகளும் இதுவரை 25 முறை நேரில் மோதியுள்ளன. கொல்கத்தா அணி 17 முறையும் பஞ்சாப் அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

துபாயில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும்  மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. இதில் 15 போட்டிகளில் சென்னை அணியும்,  பெங்களூர் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு காணப்படவில்லை .