செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (21:29 IST)

ஐபிஎல்-2020 ; சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்கு ! டெல்லி கேப்பிட்டல்ஸ் கச்சிதம் !

ஐபிஎல் திருவிழா என்றைக்கும் இல்லாத வகையில் அதிரடி திரிலிங்லிங், சஸ்பென்ஸ் ஆச்சர்யம் எனப் பலதரப்பட்ட வகையில் ரசிகர்களை ஈர்த்த்துள்ளது.

சென்னை அணி சிங்ஸ் அணி  இன்று டெல்லி  கேபிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஏற்கனவே ஒரு வெற்றி தோல்வியுடன் அடிபட்ட சிங்கமாய் பதுங்கியுள்ள சென்னை டெல்லி அணியைத் தோற்கடிக்குமா இல்லை டெல்லி சென்னையைத் தோற்கடிக்குமா என ஒரே பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது.

தற்போது விளையாடி வரும் இரு அணிவீரர்களும் இந்தியாவின் மாபெரும் பாடகர்  எஸ்.பி.பி மற்றும் ஜேடி ஜோன்ஸ் ஆகிய இருவரின்  மறைவை யொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும்  விதமாக உடையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.