1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (15:36 IST)

மகளிர் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ளது. அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையேற்று வழிநடத்த உள்ளார்.

சமீபகாலமாக இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் அணி மீது அழுத்தம் அதிகமாக உள்ளது.

உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், சப்பினேனி மேகனா, சினே ராணா, ஷிகா பாண்டே.