மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் தனது மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களை குவித்தது. ஸ்மிருதி மந்தனா, பூஜா வஸ்த்ராகர் மற்றும் ஸ்னெ ரானா ஆகியோர் தலா ஒரு அரைசதம் வீழ்த்தினர்.
இந்நிலையில் பின்னதாக பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் இந்தியாவின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. 43 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 137 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டியது இந்தியா. இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது.