திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 12 ஜனவரி 2023 (07:48 IST)

தொடரை வெல்லுமா இந்தியா? இன்று இலங்கையுடன் 2வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
 இதனை அடுத்து இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. 
இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றும் தொடரை வெல்ல இந்தியா முயற்சிக்கும் என்றும் அதேபோல் தொடரை இழந்து விடாமல் தடுக்க இலங்கை அணி தீவிர முயற்சி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியா அணியின் விராட் கோலி கடந்த போட்டியில் சதம் அடித்து நிலையில்  இன்றைய போட்டியிலும் அவரது அதிரடி ஆட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva