திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 8 ஜூன் 2024 (08:40 IST)

இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா? ரசிகர்கள் சோகம்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்த நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதையடுத்து நாளை இந்த உலகக் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கவுள்ளது.  இந்த போட்டியைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கும் நிலையில் மழை காரணமாக இந்த போட்டி தடைபட வாய்ப்புள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த போட்டி நடைபெறும் நாசா கவுண்டி மைதானம் இருக்கும்பகுதியில் நாளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மழை பெய்ய 51 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. போட்டியோ அமெரிக்க நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளது.

ஒருவேளை மழை பெய்து போட்டி பாதிக்கப்பட்டால் நான்கு மணிநேரம் வரை காத்திருந்து போட்டியை நடத்தலாம். ஆனால் நான்கு மணிவரை மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டி மழையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.