எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா!
எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மொகாலியில் நடைபெற்று வந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில் 2-வது இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது
இதனை அடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 12ஆம் தேதி பெங்களூரில் தொடங்க உள்ளது