2026 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை… இந்தியாவுடன் சேர்ந்து நடத்தும் மற்றொரு நாடு!
டி 20 உலகக்கோப்பை போட்டிகள் இப்போது ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன.
அதற்கேற்றார் போல ஐசிசியும் அதிக அளவில் டி 20 போட்டிகள் மற்றும் டி 20 லீக் போட்டிகளுக்கு இடமளித்து வருகிறது. அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டி 20 உலகக்கோப்பை போட்டிகளையும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் டி 20 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியாவுடன் இணைந்து இலங்கை நடத்தும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.