1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:01 IST)

IND vs ENG : ஒரு வருடத்திற்கு பிறகு சென்னையில் மேட்ச்!!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவக்கம். 

 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. 
 
ஆம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை. 
 
கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சம பலத்துடன் வெற்றி முனைப்பில் இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு சுவாரஸ்ய விருந்தாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.