வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (16:42 IST)

டி20 உலகக் கோப்பைக்கான சிறந்த அணி! – ஒரு இந்திய வீரர் கூட இல்லை!

உலகக்கோப்பை டி20 முடிந்த நிலையில் உலக்கோப்பைக்கான சிறந்த அணி என ஐசிசி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

மிக விமரிசையாக நடந்து வந்த உலகக்கோப்பை டி20 போட்டி நேற்று முடிவடைந்தது. இதில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடைல் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஒரு கனவு அணி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது, அதன் கேப்டனாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இடம்பெற்றுள்ளார்.

மேலும் டேவிட் வார்னர், ஜாஸ் பட்லர், சி அசலங்கா, மர்க்ராம், அலி, ஹசரங்கா, ஸம்பா, ஹெசில்வுட், ட்ரெண்ட் போல்ட், நோர்ட்ஜே மற்றும் அப்ரிடி ஆகிய வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். ஆனால் இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.