ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு வெயிட்டான பரிசு! – ஐசிசி அசத்தல் அறிவிப்பு!
அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் லீக் சுற்று முடிந்து ப்ளே ஆப் நடந்து வரும் நிலையில் பரபரப்பு எழுந்துள்ளது. நேற்றைய ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடியாக இறுதி போட்டியை அடைந்துள்ளது.
இந்நிலையில் இன்னும் இரண்டு ப்ளே ஆஃப் சுற்றுகள் மீதமுள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் போட்டியில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.