1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2024 (14:26 IST)

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார்.

இந்நிலையில் தற்போது நடந்து காபா டெஸ்ட்டில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைபுமாத்துள்ளார். ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை பும்ராதான் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வர்ணனையாளர் இயான் மோரிஸ் “பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர் பந்தை எறிவதாக நான் சொல்லவில்லை. ஆனால் அவரின் பந்துவீச்சை நான் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதை ஆய்வு செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.