1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:44 IST)

ராகுல் டிராவிட் பிறந்தநாள் ....குவியும் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் இன்று தனது 49 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

அவருக்கு கிரிக்கெட்  வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிகெட் அணியில் டிராவில் ஒரு பேட்ஸ்மேனாகச் செயல்பட்ட போது அவர் எதிரணி பத்துவீச்சாளருக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். எனவே அவர் தடுப்புச் சுவர் என அழைக்கப்பட்டார். அத்துடன் சிறபாக விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார். டிராவிட் 344 ஒரு நாள் போட்டியில் விளையாடி  12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்களுடன் 10,889 ரங்கள் அடித்துள்ளார். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்கள் அடித்துள்ளார். மொத்தம் 13,288 ரங்கள் அடித்துள்ளார். அவரது தலைமையிலான பயிற்சியில் இந்திய அணி சிறப்பாககச் செயல்பட்டுவருகிறது.