மீண்டும் கங்குலிக்கு நெஞ்சு வலி! – மருத்துவமனையில் அனுமதி!
பிசிசிஐ தலைவர் கங்குலி மீண்டும் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கங்குலி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில மாதங்கள் முன்னராக திடீர் நெஞ்சுவலியால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சைகள் முடிந்து திரும்பினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் நெஞ்சு வலி காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.