”தோனி 2023ல் விளையாட வாய்ப்பே இல்லை, ஆதலால்”....
”2023 உலக கோப்பை தொடரில் தோனி விளையாட வாய்ப்பே இல்லை, ஆதலால் தோனியை தாண்டி மற்ற வீரர்கள் குறித்து சிந்திக்க வேண்டும்” என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கடந்த உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆட்டத்தை குறித்து பலவாறு விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகு அவர் கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெறப் போவதாக பல செய்திகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து அவர், இந்திய ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தார். தோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், ”தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிட முடியாது. அவர் எவ்வளவு காலம் விளையாட நினைக்கிறாரோ அவ்வளவு காலம் விளையாடலாம், மேலும் அவர் 2023 உலக கோப்பையிலும் விளையாட வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.
மேலும் “அணியின் நலனிற்காக தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும், அடுத்த உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் இளம் வீரர்களுக்கு இப்போதே இருந்தே வாய்ப்பளிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.