வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By SInoj
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (21:20 IST)

விராட் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்

விராட் கோலியை முன்னாள் வீரர் அகர்க்கர் புகழ்ந்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் அதிரடியாக விளையாடி பல சாதனைகள் படைத்துள்ளார்.
 
விளையாட்டுத் துறையில் இருக்க, பிட்னஸ் முக்கியம். இதற்காக விராட் கோலி கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இதனால் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அசத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், இந்தியாவில் பிட்னஸ் என்ற வார்த்தைக்கு விராட் கோலி எடுத்துக் காட்டாக இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது; பிட்னஸுக்கு அளவு அமைத்தவர்களில் ஒருவர் கோலி. அவரைப் போன்ற ஒருவர் முன்னுதாரணமாக இருந்து, உடல் தகுதிக்கு தேவையான விசயங்களை முன்வைத்தால் உடற்பயிற்சி படிப்படியாக உயரும் என்று கூறினார்.
 
மேலும், இப்போதுள்ள 15-16 வயது பையன்கள் தாங்கள் இருக்க வேண்டியதைவிட பிட்டாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.