செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2024 (13:19 IST)

IND vs NZ Test: கடைசி டெஸ்ட்டும் கோவிந்தா.. இந்தியாவை வாஷ் அவுட் செய்த நியூசிலாந்து!

India Vs New Zealand

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

 

 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணி இந்தியாவை வென்று தொடரை கைப்பற்றியது.

 

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது. மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்தை 235 ரன்களில் சுருட்டியதுன், 263 ரன்களை இந்தியா குவித்ததால் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களில் நியூசிலாந்தை இந்தியா ஆல் அவுட் செய்தது.

இதனால் 147 என்ற எளிய டார்கெட்டுடன் இந்திய அணி இறங்கினாலும், நியூசிலாந்தின் பந்துவீச்சில் சிதறியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (5), ரோஹித் சர்மா (11), சுப்மன் கில் (1), விராட் கோலி (1) என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஆனால் ரிஷப் பண்ட் மட்டும் தொடர்ந்து நின்று விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்து செல்ல முயன்றார். 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என விளாசி நம்பிக்கையை அளித்தவர் 64 ரன்களில் அவுட் ஆனார்.

 

அடுத்தடுத்து விளையாடிய வீரர்களும் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 174 என்ற எளிய டார்கெட்டை கூட நெருங்க முடியாமல் வெறும் 121 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனால் மூன்றாவது டெஸ்ட்டிலும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியை வாஷ் அவுட் செய்துள்ளது.

 

Edit by Prasanth.K