புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (15:52 IST)

தங்கள் அணியின் டாப் ஸ்கோரரை தாரை வார்த்த ஆர் சி பி!

ஆர் சி பி அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கல்லை ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தவர் தேவ்தத் படிக்கல். மிகவும் மோசமாக இருந்த பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டத்தை புணரமைத்தவர் என்று தேவ்தத்தை சொல்லலாம். கோலியுடன் இணைந்து அவர் சிறப்பாக விளையாடி சில போட்டிகளை வென்றுதந்துள்ளார்.

ஆனால் அவரை இந்த ஆண்டு அணியில் தக்க வைக்காமல் ஏலத்தில் விட்டது ஆர் சி பி அணி நிர்வாகம். இந்நிலையில் இன்று ஏலத்தில் அவரை ஆர் சி பி அணியே மீண்டும் எடுக்கும் என நினைத்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.75 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.