1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 9 டிசம்பர் 2023 (08:12 IST)

சம்மர் கிரிக்கெட்டுக்கு தலைப்பு செய்தி இதுதான்… ஜான்சன் விமர்சனத்துக்கு வார்னர் பதில்!

உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்து பாகிஸ்தானோடு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட உள்ளது. இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்த தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்க உள்ளார்.

இதன் மூலம் அவருக்கு பிரியாவிடை கொடுக்க ஆஸி கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு ஆஸி அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கடும விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ளதில் “வார்னர் சாண்ட் பேப்பர் விவகாரத்தில் சிக்கி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் கேப்டன் பதவி ஏற்க முடியாது என வாரியம் தடை விதித்திருந்தது.

ஆனால் இப்போது ஏன் அவரை ஏன் ஹீரோவை போல கொண்டாடுகிறார்கள். அவருக்காக பேர்வெல் கொடுக்கிறார்கள். இது ஏன் என்று யாராவது எனக்கு விளக்குங்கள்.  தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடிவரும் ஒருவரை அணியில் சேர்த்துள்ளார்கள். அவர் இந்த பேர்வெல்லுக்கு தகுதி இல்லாத நபராக நான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஜான்சனின் இந்த விமர்சனத்துக்கு தற்போது பதிலளித்துள்ளார் மிட்செல் ஜான்சன். அதில் “ நடக்க உள்ள கோடைகால கிரிக்கெட்டுக்கான தலைப்பு செய்தி மட்டுமே இது. அனைவருக்குமே கருத்து சொல்ல உரிமை உண்டு. நாங்கள் ஒரு சிறப்பான தொடருக்காக காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.