செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (15:47 IST)

சென்னை அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்! – ரசிகர்கள் ஷாக்!

Adam Milne
இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னை அணி மும்பை அணியுடன் மோத உள்ள நிலையில் ஒரு வீரர் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆட்டங்கள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

தற்போதைய சீசனில் இரண்டு அணிகளுமே தரவரிசை கடைசியில் உள்ளன. 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 1 போட்டியில் வென்றுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற உள்ள போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவர் விலகியுள்ள நிலையில் இது சென்னை அணியின் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் உள்ளது.