1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (07:53 IST)

அந்த இடத்தில்தான் தென்னாப்பிரிக்கா எங்களிடம் இருந்து போட்டியை கைப்பற்றியது – கேப்டன் சூர்யகுமார் யாதவ்!

இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடந்த நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென்னாப்பிரிக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 சேர்த்தது.

மழைக் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு 152 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 154 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் “நாங்கள் நல்ல இலக்கைதான் நிர்ணயித்திருந்தோம். ஆனால் தென்னாப்பிரிக அணி பவர்ப்ளே ஓவர்களில் அதிரடியாக விளையாடியது. அதுபோலதான் நாங்களும் விளையாட வேண்டும் என நினைத்தோம். தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸ் அதை வலுவாகக் கூறியுள்ளது. ” எனக் கூறியுள்ளார்.