புதன், 5 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2025 (07:25 IST)

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் அதிரடி மாற்றம்..!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அந்த தொடரில் மட்டும் அவர் 32 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் தற்காலக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவாகியுள்ளார். ஆனால் அவரின் தனித்துவமான பவுலிங் ஆக்‌ஷன் காரணமாக அடிக்கடி காயமடைந்து வருகிறார்.

இந்நிலையில் பும்ரா அடுத்து நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெறமாட்டார் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (து. கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், மொஹம்மது ஷமி, வருண் சக்ரவர்த்தி.