செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:35 IST)

ஆசியக் கோப்பையில் இருந்து திடீரென விலகி இந்தியா சென்ற பும்ரா!

ஆசியக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழைக் காரணமாக முடிவில்லாமல் போனது.

இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து 266 ரன்கள் சேர்த்த நிலையில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா தனிப்பட்ட சூழல் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து தற்காலிகமாக விலகி இந்தியா சென்றுள்ளார்.

அவர் நேபாளத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அடுத்த கட்ட சுற்றுப் போட்டிகளில் மீண்டும் வந்து விளையாடுவார் என சொல்லப்படுகிறது.