செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (09:49 IST)

15 பந்துகளில் நான்கு முறை கோலியின் விக்கெட்டை எடுத்த பும்ரா… பயிற்சியில் கோலி சுணக்கம்!

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் தன்னுடைய உச்சகட்ட ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. இத்தனைக்கும் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அதிக ரன் சேர்த்த வீரராக இருந்தார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் அவரின் ப்ரைம் பார்மில் அவர் இல்லை என்பதுதான் நிசர்தனம். வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கூட அவர் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இந்நிலையில் இன்று தொடங்கும் கான்புர் டெஸ்ட்டுக்காக அவர் நேற்று பயிற்சி செய்த போது பும்ராவின் 15 பந்துகளில் நான்கு முறை தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.