1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (10:08 IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த பிராவோ!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் டுவெய்ன் பிராவோ. உலகமெங்கும் டி 20 லீக் போட்டிகள் அதிகளவில் நடக்க ஆரம்பித்த போது அந்த லீக்குகளில் அதிகமாக விளையாடுபவர்களாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆனார்கள். அதில் ஒருவர்தான் டுவெய்ன் பிராவோ.

ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், பின்னர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் விளையாடியவர் ஆலரவுண்டர் டுவெய்ன் பிராவோ. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று அந்த அணியோடு பயனித்து வருகிறார்.

அதன் பின்னர் கரிபியன் லீக் தொடரில் மட்டும் விளையாடி வந்த பிராவோ, தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று அவர் தன்னுடைய கடைசி டி 20 போட்டியை விளையாடினார். அவருக்கு வீரர்கள் மரியாதை செய்து விடைபெற்றனர்.