வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (19:03 IST)

உலகக்கோப்பையால் பெரும் நஷ்டம்.. ஐசிசி தலைவராகும் ஜெய்ஷா? - கூடுகிறது ஐசிசி பொதுக்குழு கூட்டம்!

நாளை ஐசிசி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி சாம்பியன்ஷிப் வென்றது.

அதை தொடர்ந்து ஐசிசி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது ஐசிசி தலைவராக உள்ள நியுசிலாந்தின் கிரேக் பார்க்ளேவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் இந்த பொதுக்குழு கூட்டத்தில் உலகக்கோப்பை டி20 செலவு விவரங்கள், ஐசிசியின் அடுத்த தலைவர் குறித்த விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த முறை உலகக்கோப்பை டி20 போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதில் ஐசிசிக்கு ரூ.167 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விவாதிப்பதோடு, சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா பங்கேற்காது என பிடிவாதம் பிடிப்பது குறித்த சமரச பேச்சுகளிலும் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐசிசியின் அடுத்த தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை நியமிப்பது குறித்து பேசப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K