புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (09:10 IST)

இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸுக்குதான் செம்ம டிமாண்ட்… இந்த அணி குறியா இருக்கும்- அஸ்வின் தகவல்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் தூணாக விளங்கி வருகிறார் ஸ்டோக்ஸ். 50 ஓவர் இறுதிப் போட்டி மற்றும் 20 ஓவர் இறுதிப் போட்டி ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து கோப்பையை வெல்ல முக்கியக் காரணியாக இருந்தார்.

இந்நிலையில் இந்த மாதம் நடக்க உள்ள மினி ஏலம், நடக்க உள்ள நிலையில் அதில் பென் ஸ்டொக்ஸ் பதிவு செய்துள்ளார். அதனால் இந்த ஏலத்தில் இவரை எடுக்கதான் அதிக டிமாண்ட் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள அஸ்வின் “பென் ஸ்டோக்ஸை எடுக்க லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி அதிகமாக ஆர்வம் காட்டும். சி எஸ் கே அணியும் ஸ்டோக்ஸ் அல்லது சாம் கரண்ணை எடுக்க ஆர்வம் காட்டும்” எனக் கூறியுள்ளார்.