செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 ஜூலை 2024 (08:27 IST)

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அஞி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் வெற்றிக் கோப்பையோடு செல்வது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.