235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி

Last Updated: சனி, 8 டிசம்பர் 2018 (12:45 IST)
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


 
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  தொடக்க வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், புஜாரா நிலைத்து நின்று 123 ரன்கள் எடுத்தார்.
 
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில்  7விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி , 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


இதில் மேலும் படிக்கவும் :