1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (19:18 IST)

ஆசிய கோப்பை: ஹாங்காங் அணி பந்து வீச்சு தேர்வு !

cricket
ஆசிய கோப்பை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   இன்றுடன் லீக் சுற்று முடிவடையும் நிலையில், ஏ பிரிவில் இன்று நடக்கும் 6 வது போட்டியில், பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி,  நிஜாகத் தலைமையிலான  ஹாங்காங்குடன் மோதுகிறது.

இந்தியாவிடம் பாகிஸ்தானும்,  ஹாங்காங்கும் தோற்றிருந்த நிலையில், இன்று  இரு அணிகளும் பலப்பரீசை செய்யவுள்ளன.

இப்போட்டியில் பாகிஸ்தான் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா என்பது இன்றைய போட்டியில் தெரியும். தற்போது, டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிஜாகத் பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளார்.