1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2022 (22:37 IST)

ஆசிய கோப்பை ; இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் !

afganisthan -srilanka
ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இன்று ஆப்கானிஸ் தான் அணி  முதல் வெற்றிபெற்றுள்ளது.

ஆசிய கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெ போட்டி இன்று தொடங்கியுள்ளது,.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நாபி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இதையடுத்து, தற்போது பேட்டிங்செய்து வரும் இலங்கை அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். இதில், நிசாங்கா 3 ரன் களில் அவுட்டானார். இதையடுத்து, குசால் மென்டீச் 2 ரன் களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார், ,பனுஷா ராஜபக்ஷேவும்,  தனுஷ்காவும் விளையாடினர். 19.4 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகள் இழந்து இலங்கை அணி 105ரன்கள் மட்டும் எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 106 ரன் கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணீயில் , புபாஸ் 40 ரன்களும், சாஹை  37 ரன்களும், இர்போஅன் 15 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். எனவே ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவரில் 2விக்கெடுகள் இழப்பிற்கு  106 ரன்கள் அடித்து, 59 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெடுக்ள் வித்தியாசத்தில்   வெற்றி பெற்றது.