அமிதாப் பச்சனின் கனவு சிதைத்த சிம்மன்ஸ் அண்ட் கோ


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (17:47 IST)
உலகக் கோப்பை டி20 தொடரில், மும்பை வான்கடே மைதானாத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
 
 
முன்னதாக, கடந்த செவ்வாய்கிழமை அன்று [29-03-16] பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை தனது இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்து விருந்து உபசரித்தார்.
 
அப்போது கிறிஸ் கெய்லிடம், இந்திய அணிக்கு எதிராக அவர் 100 ரன்கள் குவிக்க வேண்டும் என்றும் ஆனால், இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் கிறிஸ் கெய்ல் பதிவு செய்திருந்தார்.
 
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், கிறிஸ் கெய்ல் 5 ரன்களில் வெளியேறியதோடு, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், அமிதாப் பச்சனின் இரண்டு கனவுகளும் சிதைந்து போயுள்ளது.

அதிரடியாக ஆடிய லெண்டல் சிம்மன்ஸ் 51 பந்துகளில் [7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 82 ரன்கள் குவித்தார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ், 36
 பந்துகளில் [3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 52 ரன்கள் எடுத்தார்.
 
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கிறிஸ் கெய்ல், ”எனக்கு 100 ரன்கள் அடிப்பதை விட அணி வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கதக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்..


இதில் மேலும் படிக்கவும் :