செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (17:39 IST)

3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 73 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

India -australia test
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்டின் இந்திய அணி 76 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இந்த நிலையில், 2வது இன்னிங்ஸில், இந்திய அணி சிறப்பாக விளையாட முயற்சி செய்தாலும்,   நாதன் சுழலில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

எனவே, ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த எளியை இலக்கை ஆஸ்திரேலியா அணி எட்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்திய அணி பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.