திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (19:07 IST)

3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி சூப்பர் வெற்றி !

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  
 

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் பந்துவீச முடிவு செய்தார்.

எனவே தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது..

இந்த அணியின் கிலெசன் 34 ரன்களும், மாலன் 15 ரன்களும், மேக்ரோ ஜேன்சன் 14 ரன்களும் அடித்தனர். 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து, இந்திய அணி 100 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் சுபான் கில் 49 ரன் களும், ஸ்ரேயாஷ் அய்யர் 28 ரன் களும், இஷான் கிஷான் 10 ரன் களும் அடித்தனர். எனவே இந்திய அணி 10.1 ஓவ்ர்களில் 105 ரன் கள் அடித்து வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில்பிராடின் 1 விக்கெட்டும், நிகிடி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்,

Edited by Sinoj