1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 நவம்பர் 2023 (19:10 IST)

7 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகள் காலி..! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் பும்ரா, ஷமி!

Shami
உலக கோப்பை இறுதி போட்டியில் 241 என்ற இலக்கில் களம் இறங்கியுள்ள ஆஸ்திரேலியாவை இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.



இன்றைய இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்திய அணி பவுலிங்கில் தனது ஆட்டத்தை காட்டி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரை இரண்டாவது ஓவரிலேயே முகமது ஷமி வீழ்த்திய நிலையில், ஜாஸ்பிரித் பும்ரா தன் பங்கிற்கு மிட்சல் மார்ஷை 5வது ஓவரிலும், ஸ்மித்தை 7வது ஓவரிலும் வீழ்த்தினார். தனது ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை இழந்து தள்ளாட தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியா பேட்டிங்கின்போது பேட் கம்மின்ஸ் சொன்னபடி மைதானம் அமைதியில் மூழ்கினாலும் தற்போது ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை இந்தியா அறுவடை செய்ய தொடங்கியுள்ளதால் சத்தங்களால் நிறைந்துள்ளது.

Edit by Prasanth.K