வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:37 IST)

2 சதம் 4 அரை சதத்துடன் 622 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இந்தியா

கொழும்புவில் நடைப்பெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலைமையிலான  இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கையை எளிதில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் அட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது. புஜாரா 128 ரன்களுடனும், ரஹானே 103 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஆரம்பத்திலே விக்கெட்டை பறிகொடுத்தது. புஜாரா 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.
 
ரஹானே 132 ரன்களில் வெளியேறினார். அஸ்வின், சகா மற்றும் ஜடேஜே ஆகியோரின் அரை சதத்தால் இந்திய அணியை 600 ரன்களை கடந்தது. 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஜடேஜா 85 பந்துகளில் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.