திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஆகஸ்ட் 2022 (09:24 IST)

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக தமிழக முன்னாள் வீரர்!

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தொழில்நுட்ப ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டியில் விளையாடி இருப்பவர் ஸ்ரீதரன் ஸ்ரீராம். ஆல்ரவுண்டரான இவர் இப்போது வங்கதேச அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கபப்ட்டுள்ளார்.

46 வயதான ஸ்ரீராம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.. ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

‘ஸ்ரீராம் டி 20 உலகக்கோப்பை தொடர் வரை வங்கதேச அணியுடன் இணைந்து பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.