திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (09:26 IST)

காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜடேஜா… ரசிகர்களுக்கு செய்தி!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றூ நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக அக்ஸர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையிலும் விளையாட மாட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நிறைய பேரின் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. விரைவிலேயே பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் கிரிக்கெட் ஆட ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.