இன்றைக்கு RCB வெற்றி பெறுவது உறுதி.. ஆரூடம் சொல்லும் ரசிகர்கள்! – இதுதான் காரணமாம்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ள நிலையில் இதில் ஆர்சிபி அணிதான் வெற்றி பெறும் என நம்புகிறார்கள் ஆர்சிபி ரசிகர்கள்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது. ஆனால் பஞ்சாப் அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
ஆர்சிபி அணியில் விராட் கோலி, ஃபாப் டு ப்ளெசிஸ், மேக்ஸ்வெல் என பேட்டிங் லைனில் வலிமையான வீரர்கள் உள்ளனர். பஞ்சாப் அணியிலும் ஷிகர் தவான், சாம் கரண், ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள்.
தற்போது நடந்து வரும் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் அவரவர் ஹோம் க்ரவுண்டில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்றைய ஆர்சிபி போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. அதனால் இந்த ஹோம் க்ரவுண்ட் வெற்றி வரிசையில் ஆர்சிபியும் தனது வெற்றிக்கணக்கை தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் கணிக்கின்றனர்.
Edit by Prasanth.K