1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala
Last Updated : திங்கள், 20 டிசம்பர் 2021 (18:25 IST)

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் உணவு பொருட்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

பாலை தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளை குழந்தைகளுக்கு மறக்காமல் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் எலும்பு மட்டுமின்றி, பற்களும் வலுவுடன் வளரும்.

பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இன்றைய காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடித்த உணவுப் பொருளாக உள்ளது. இருப்பினும் இதனை அளவாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தைகளின் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிடும்.
 
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை வேகவைத்து கொடுத்து வந்தால், கால்சியம் சத்து மட்டுமின்றி, புரோட்டீன், வைட்டமின் டி போன்ற சத்துக்களும் வளமாக கிடைக்கும்.
 
பொதுவாக மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மட்டும் தான் உள்ளது என்று தெரியும். ஆனால் மத்தி மீனில் கால்சியமும் அதிகம் உள்ளது. எனவே இதனை வாரம் 1-2 முறை குழந்தைகளின் உணவில் சேர்த்து வாருங்கள்.
 
பசலைக்கீரையில் எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றில் மட்டுமின்றி அனைத்து கீரைகளிலும் கால்சியம் உள்ளது. ஆகவே வாரத்திற்கு மூன்று முறை குழந்தைகளுக்கு கீரைகளை சமைத்து கொடுங்கள்.
 
தயிரும் பால் பொருட்களில் ஒன்று. ஆகவே தினமும் அவர்களின் உணவில் தயிரை மறக்காமல் சேர்த்து வாருங்கள். ப்ராக்கோலியில் கூட எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உள்ளது. ஆகவே இதனையும் குழந்தைகளின் டயட்டில் சேர்த்து வாருங்கள்.
 
கோடையில் ஆரஞ்சு பழம் விலை மலிவில் கிடைக்கும். ஆகவே குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தை அதிகம் வாங்கி கொடுங்கள். இதில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியமும் அதிகம் உள்ளது.
 
சில குழந்தைகளுக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்சனை இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு பாலுக்கு பதிலாக சோயா பால் கொடுக்கலாம்.